மாதாந்திர பராமரிப்பு பணி: தூத்துக்குடியில் நாளை மறுநாள் மின்தடை
தூத்துக்குடியில் வாகைகுளம், விளாத்திகுளம், குளத்தூர் உள்ளிட்ட துணைமின் நிலையங்களில் நாளை மறுநாள் மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.;
தூத்துக்குடி ஊரக செயற்பொறியாளர் அலுவலக செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
தூத்துக்குடி மின்பகிர்மான வட்டம், வாகைகுளம் துணைமின் நிலையத்தில் நாளை மறுநாள் (9.8.2025, சனிக்கிழமை) மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் அன்றைய தினம், வாகைகுளம் துணைமின் நிலையம் மூலம் மின் விநியோகம் வழங்கப்படும் பகுதிகளான சேர்வைகாரன்மடம், சக்கம்மாள்புரம், சிவஞானபுரம், முடிவைத்தானேந்தல், ராமச்சந்திராபுரம், ஏர்போர்ட், செல்வம்சிட்டி, பவானிநகர், கூட்டாம்புளி, குலையன்கரிசல், போடம்மாள்புரம், சிறுபாடு, திரவியபுரம், புதுக்கோட்டை அம்மன் கோவில்தெரு, மறவன்மடம், அந்தோனியார்புரம், பைபாஸ், டோல்கேட், கோரம்பள்ளம், வர்த்தகரெட்டிப்பட்டி, தெய்வசெயல்புரம், வல்லநாடு, அனந்தநம்பிகுறிச்சி, எல்லைநாயக்கன்பட்டி, பொட்டலூரணி விலக்கு, முருகன்புரம், ஈச்சந்தாஓடை, நாணல்காட்டான்குளம், சேதுராமலிங்கபுரம், கோனார்குளம் ஆகிய இடங்களுக்கு காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சார விநியோகம் நிறுத்தப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை:
விளாத்திகுளம்:
விளாத்திகுளம் துணைமின் நிலையத்தில் நாளை மறுநாள் (9.8.2025, சனிக்கிழமை) மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், விளாத்திகுளம் துணைமின் நிலையம் மூலம் மின் விநியோகம் வழங்கப்படும் பகுதிகளான மந்திகுளம், செங்கல்படை, கமலாபுரம், பிள்ளையார்நத்தம், பேரிலோவன்பட்டி, விளாத்திகுளம், அயன்பொம்மையாபுரம், ராமசந்திராபுரம் அதனை சுற்றியுள்ள ஊர்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சார விநியோகம் நிறுத்தப்படும்.
குளத்தூர்:
குளத்தூர் துணைமின் நிலையத்தில் நாளை மறுநாள் (9.8.2025, சனிக்கிழமை) மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் குளத்தூர் துணைமின் நிலையம் மூலம் மின் விநியோகம் வழங்கப்படும் பகுதிகளான கீழவைப்பார், வைப்பார், வேப்பலோடை, குளத்தூர், மார்த்தாண்டம்பட்டி, முள்ளுர் அதனை சுற்றியுள்ள ஊர்களில் காலை 9 முதல் மாலை 4 மணி வரை மின்சார விநியோகம் நிறுத்தப்படும்.
சூரங்குடி:
சூரங்குடி துணைமின் நிலையத்தில் நாளை மறுநாள் (9.8.2025, சனிக்கிழமை) மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு நடைபெற உள்ளதால், சூரங்குடி துணைமின் நிலையம் மூலம் மின் விநியோகம் வழங்கப்படும் பகுதிகளான மேல்மாந்தை, ஈ.வேலாயுதபுரம், வேம்பார், பச்சையாபுரம், அரியநாயகிபுரம் அதனை சுற்றியுள்ள ஊர்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சார விநியோகம் நிறுத்தப்படும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.