சாப்பிடும் போது எமனாக மாறிய ’ முட்டை’; காஞ்சிபுரம் கொத்தனாருக்கு நடந்த சோகம்

இரவு சாப்பிடும் போது காஞ்சிபுரத்தை சேர்ந்த ரவி என்பவர் வேக வைத்த முழு முட்டையை விழுங்கியதாக கூறப்படுகிறது;

Update:2025-08-14 08:13 IST

ஏஐ படம்  

உத்திரமேரூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியம் மலையாங்குளம் கிராமம் வன்னியர் தெருவை சேர்ந்தவர் ரவி (வயது 53). கொத்தனார். இவருக்கு வளர்மதி (45) என்ற மனைவியும், சினேகா (24) என்ற மகளும் உள்ளனர்.நேற்று முன்தினம் இரவு சாப்பிடும் போது ரவி வேக வைத்த முழு முட்டையை விழுங்கியதாக கூறப்படுகிறது. முட்டை தொண்டையில் சிக்கியதால் அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது.

உடனடியாக அவரை படூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து உத்திரமேரூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் ஜெயவேல் உத்தரவின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்