திருப்பூர் பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு - சுற்றுலா பயணிகளுக்கு தடை
பஞ்சலிங்க அருவியின் நீர் பிடிப்பு பகுதிகளான குருமலை, குளிப்பட்டி பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.;
திருப்பூர்,
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலைப்பேட்டைக்கு அருகில், திருமூர்த்தி மலையில் பஞ்சலிங்க அருவி அமைந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில், அமணலிங்கேஸ்வரர் கோவிலுக்கு அருகில் அமைந்துள்ள இந்த அருவிக்கு சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் அதிக அளவில் வருகை தருகின்றனர்.
இந்த நிலையில், பஞ்சலிங்க அருவியின் நீர் பிடிப்பு பகுதிகளான குருமலை, குளிப்பட்டி பகுதிகளில் பெய்து வரும் கனமழையால், அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பாதுகாப்பு கருதி பஞ்சலிங்க அருவிக்கு சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.