தூத்துக்குடியில் தேங்காய் நார் குடோனில் தீவிபத்து: ரூ.10 லட்சம் மதிப்பிலான நார்கள் சேதம்

தூத்துக்குடி அருகே பேரூரணியில் சாமுவேல் என்பவருக்கு சொந்தமான சாரா கோகோ பைபர் நிறுவனத்தின் தேங்காய் நார் குடோன் உள்ளது.;

Update:2025-07-26 23:13 IST

தூத்துக்குடி அருகே பேரூரணியில் சாமுவேல் என்பவருக்கு சொந்தமான சாரா கோகோ பைபர் நிறுவனத்தின் தேங்காய் நார் குடோன் உள்ளது. இந்தக் குடோனில் நேற்று தீவிபத்து ஏற்பட்டது. தகவலறிந்து வந்த சிப்காட் நிலைய அலுவலர் கார்த்திகேயன் தலைமையில் சிப்காட் மற்றும் தூத்துக்குடி தீயணைப்பு வீரர்கள் 3 வண்டிகளில் சென்று பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். எனினும் இந்த தீவிபத்தில் ரூ.10 லட்சம் மதிப்பிலான தேங்காய் நார்கள் எரிந்து சாம்பலாகின. தீவிபத்து காரணமாக அந்தப் பகுதி முழுவதும் புகை மண்டலமாக காணப்பட்டது. இதுகுறித்து புதுக்கோட்டை காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்