தூத்துக்குடியில் உடல் சிதைந்த நிலையில் ஆண் சடலம் மீட்பு: போலீஸ் விசாரணை
கயத்தாறு-கோவில்பட்டி நெடுஞ்சாலையில் ராஜாபுதுக்குடி கிராமம் அருகில் உடல் முழுவதும் சிதைந்த நிலையில் ஆண் சடலம் கிடந்தது.;
தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு-கோவில்பட்டி நெடுஞ்சாலையில் ராஜாபுதுக்குடி கிராமம் அருகில் உடல் முழுவதும் சிதைந்த நிலையில் ஆண் சடலம் கிடந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த கயத்தாறு காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
இறந்து கிடந்தவருக்கு சுமார் 55 வயது இருக்கும். இவர் நடந்து செல்லும் போது ஏதோ வாகனம் மோதி இறந்துள்ளார். நீல நிற சட்டையும், அரைக்கால் டவுசரும் அணிந்திருந்தார். அவர் உடல் முழுவதும் சிதைந்த நிலையில் கிடந்தது. இவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை.
போலீசார் அவரது சடலத்தை பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த நபர் குறித்து தகவல் அறிந்தவர்கள் 9498101848 என்ற எண்ணுக்கு தகவல் தெரிவிக்கலாம் என்று கயத்தாறு காவல் நிலைய போலீசார் தெரிவித்துள்ளனர்.