அச்சுதானந்தன் மறைவு; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

கேரள அரசியலில் ஆழமாக பதியும் புரட்சிகர மரபை விட்டுச் சென்றுள்ளார் அச்சுதானந்தன் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.;

Update:2025-07-21 18:26 IST

சென்னை,

கேரள முன்னாள் முதல்-மந்திரி அச்சுதானந்தன் (வயது 101) வயது மூப்பு காரணமாக பொது வாழ்க்கையில் இருந்து விலகி ஓய்வில் இருந்தார். ஏற்கனவே பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு திருவனந்தபுரம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் திருவனந்தபுரம் மருத்துவமனையில் உள்ள அச்சுதானந்தன் உடல் நலன் குறித்து முதல்-மந்திரி பினராயி விஜயன், மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கோவிந்தன் ஆகியோர் நேரில் சந்தித்தனர்.

அப்போது அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறப்பட்டது.கடந்த சில மணி நேரங்களாக அவரது ரத்த அழுத்தத்தில் மாற்றம் ஏற்பட்ட நிலையில் அச்சுதானந்தன் இன்று மாலை காலமானார்.அச்சுதானந்தன் மறைவிற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றன்றனர். அந்தவகையில்,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பதிவில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தில்,

கேரள அரசியலில் ஆழமாக பதியும் புரட்சிகர மரபை விட்டுச் சென்றுள்ளார் அச்சுதானந்தன்; கொள்கை ரீதியான அரசியல், பொது சேவை உணர்வை கொண்ட பெருந்தலைவர் அவர். தமிழ்நாட்டு மக்கள் சார்பாக செவ்வணக்கம்.அவரின் இழப்பால் வாடும் குடும்பத்தினருக்கும், சிபிஐஎம் பணியாளர்களுக்கும், கேரள மக்களுக்கும் எனது இரங்கல்.. எனது சார்பாகவும், தமிழ்நாட்டு மக்களின் சார்பாகவும் அமைச்சர் ரகுபதி அஞ்சலி செலுத்துவார் என அதில் பதிவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்