முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதி
காலை நடைபயிற்சியின்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு லேசான தலைசுற்றல் ஏற்பட்டுள்ளது.;
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்றார். கொளத்தூர் கபாலீசுவரர் கலைக்கல்லூரி விழாவில் பங்கேற்க இருந்த நிலையில் மருத்துவ பரிசோதனைக்கு சென்றார்.
இந்நிலையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. காலை நடைபயிற்சியின்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு லேசான தலைசுற்றல் ஏற்பட்டுள்ளது.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறிய மருத்துவ அறிகுறிகள் அடிப்படையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் நடைபெற்று வருவதாகவும் அப்பல்லோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.