அப்பல்லோவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மருத்துவ பரிசோதனை

அப்பல்லோவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்படுகிறது.;

Update:2025-07-21 12:10 IST

சென்னை,

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. சென்னை கொளத்தூர் கபாலீசுவரர் கலைக்கல்லூரி விழாவில் பங்கேற்க இருந்த நிலையில் மருத்துவ பரிசோதனை நடக்கிறது.

மேலும் கோவை, திருப்பூருக்கு நாளை செல்ல உள்ள நிலையில் வழக்கமான உடல் பரிசோதனை என்று தகவல் வெளியாகியுள்ளது. முதல்-அமைச்சரை 2 நாட்கள் ஓய்வில் இருக்க மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் முதல்-அமைச்சரின் 2 நாட்கள் சுற்றுப்பயணம் ஒத்திவைக்கப்படும் என தெரிகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்