சென்னை: 6 வார்டுகளில் நாளை உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
பொதுமக்கள் தங்கள் வார்டுகளில் நடைபெறும் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பங்கேற்று பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.;
சென்னை,
பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-
பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நாளை (05.08.2025) தண்டையார்பேட்டை மண்டலம், வார்டு-43ல் கும்மாளம்மன் கோயில் தெருவில் உள்ள சமூகநலக் கூடம், இராயபுரம் மண்டலம், வார்டு-63ல் செல்லப்பிள்ளையார் கோயில் தெருவில் உள்ள எம்.எஸ்.மஹால், திரு.வி.க.நகர் மண்டலம், வார்டு-66ல் காமராஜர் திருமண மண்டபம், தேனாம்பேட்டை மண்டலம், வார்டு-116ல் திருவல்லிக்கேணி, டி.பி.கோவில் முதல் தெருவில் உள்ள பாரதியார் இல்லம், ஆலந்தூர் மண்டலம், வார்டு-162ல் தில்லை கங்கா நகர், உள்வட்டச் சாலை 45வது தெருவில் உள்ள ஆனந்தா திருமண மண்டபம், அடையாறு மண்டலம், வார்டு-170, ஆசிரியர் காலனி, லேக்வியூ சாலையில் உள்ள அருள்மிகு ஶ்ரீ பிரசன்னா வெங்கடேஷ்வர பெருமாள் திருமண மண்டபம் ஆகிய 6 வார்டுகளில் நடைபெறவுள்ளது.
இந்த முகாம்கள் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும். பொதுமக்கள் தங்கள் வார்டுகளில் நடைபெறும் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பங்கேற்று பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.