சென்னையில் வாட்டர் மெட்ரோ திட்டம்: சாத்தியக் கூறுகள் குறித்து 6-ம் தேதி ஆலோசனை

வாட்டர் மெட்ரோவை சுற்றுலாவுக்காக மட்டுமல்லாமல் பொதுப் போக்குவரத்தாகவும் கொண்டு வரத் திட்டமிடப்பட்டுள்ளது.;

Update:2025-08-04 19:15 IST

கோப்புப்படம்

சென்னை,

தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையே அதிக மக்கள் வாழும் நகரமாக உள்ளது. பேருந்துகள், மின்சார ரெயில், மெட்ரோ ரெயில் என்று போக்குவரத்திற்கு பல வழிகள் இருந்தும் காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து மிக கடும் நெரிசலாகவே இருந்து வருகிறது. போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காகவே சாலைகள் விரிவாக்கம், மேம்பாலம், கூடுதல் மெட்ரோ வழித்தடங்கள் பணிகள் சென்னையில் நடந்து வருகிறது.

இந்த நிலையில், சென்னை வாட்டர் மெட்ரோ திட்டத்தை அறிமுகப்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதாவது, நேப்பியர் பாலம் முதல் கிழக்கு கடற்கரை சாலை வரை பொதுமக்கள் படகில் செல்ல ஏதுவாக நீர்வழிப் போக்குவரத்தை மேற்கொள்ள அரசு முடிவு செய்துள்ளது.

இந்த திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து வாட்டர் மெட்ரோ திட்டத்திற்கான சாத்தியக் கூறுகள் குறித்து வருகிற 6-ம் தேதி சென்னை நந்தனத்தில் 3 துறைகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. நீர்வளத்துறை, மாநகராட்சி, சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் ஆலோசனை மேற்கொள்கிறது; வாட்டர் மெட்ரோவை சுற்றுலாவுக்காக மட்டுமல்லாமல் பொதுப் போக்குவரத்தாகவும் கொண்டுவரத் திட்டமிடப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்