மத்திய பாஜக அரசு மதவாதத்தை வளர்க்கிறது; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்

தமிழ்நாட்டின் ஒருமித்த குரலையும் எடுத்து வைத்து உரிமைகளை பாதுகாத்திட அறிவுறுத்தியுள்ளேன் என்றார்;

Update:2025-07-18 14:33 IST

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் 21ம் தேதி தொடங்கி அடுத்த மாதம் 21ம் தேதி வரை ஒருமாதம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தொடரில் பல்வேறு மசோதாக்களை அறிமுகம் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதனிடையே, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடர்பாக திமுக எம்.பி.க்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தினார். கூட்டத்தொடரில் எவ்வாறு செயல்படுவது என்பது குறித்து திமுக எம்.பி.க்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார். மேலும், தமிழகத்திற்கான திட்டங்கள், நிதி குறித்த கேள்விகள் எழுப்புவது குறித்து ஆலோசனை நடைபெற்றது.

இந்நிலையில், மத்திய பாஜக அரசு மதவாதத்தை வளர்க்கிறது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், மத்திய பாஜக அரசின் 11 ஆண்டுகள் என்பது, மக்களின் உரிமைகளை நசுக்குவது, மாநிலங்களின் உரிமைகளைப் பறிப்பது, எங்கும் - எதிலும் இந்தி & சமஸ்கிருதத்தைத் திணிப்பது, மதவாதத்தை வளர்ப்பது, முக்கியமாக, தமிழ்நாட்டை வஞ்சிப்பது என #NationalDictatorshipArrangement (தேசிய சர்வாதிகார) ஆட்சியை நடத்தி வருவதற்குத் தடையாக - மக்களாட்சியின் குரலாக ஒலிக்கும் நமது திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள், நடைபெறவுள்ள நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் இந்திய மக்களின் உள்ளுணர்வுகளையும் - தமிழ்நாட்டின் ஒருமித்த குரலையும் எடுத்து வைத்து, நிதியுரிமை - மொழியுரிமை - கல்வியுரிமை - கூட்டாட்சி உரிமை ஆகியவற்றைப் பாதுகாத்திட அறிவுறுத்தியுள்ளேன்!

இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்