கோவையில் 16 வயது சிறுமி கூட்டு பலாத்காரம்: 7 பேருக்கு வாழ்நாள் சிறை தண்டனை

கோவையில் 16 வயது சிறுமி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் 7 பேருக்கு வாழ்நாள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.;

Update:2025-07-18 15:57 IST

கோவை,

கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் கோவை, ஆர்.எஸ்.புரம் பகுதியிலுள்ள பூங்காவில், 16 வயது சிறுமி தனது நண்பருடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த 7 பேர் கொண்ட கும்பல், இருவரையும் தாக்கினர். பின்னர் சிறுமியை பார்க்கில் மறைவான இடத்துக்கு இழுத்து சென்று கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்தனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பிஓடிய 7 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். கோவை முதன்மை போக்சோ கோர்ட்டில் இந்த வழக்கு விசாரணை நடந்து வந்தது.இந்த வழக்கில் சாட்சி விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பு அளிக்கப்பட இருந்த நிலையில் இன்றைக்கு தள்ளிவைக்கப்பட்டது.

இந்த நிலையில், வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதன்படி, 16 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதான மணிகண்டன், கார்த்திக், ஆட்டோ மணிகண்டன், ராகுல், பிரகாஷ், நாராயணமூர்த்தி, கார்த்திகேயன் ஆகிய 7 பேருக்கு வாழ்நாள் சிறை தண்டனை விதித்து கோவை போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்