ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 89 சதவீத கிராமப்புற வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு

ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 89 சதவீத கிராமப்புற வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.;

Update:2025-07-21 09:53 IST

புதுடெல்லி,

கிராமப்புறங்களில் இருக்கும் அனைத்து வீடுகளுக்கும் இல்லந்தோறும் சுகாதாரமான குடிநீர் வழங்கும் ஜல் ஜீவன் திட்டத்தை மத்திய அரசு கடந்த 2019-ம் ஆண்டு தொடங்கியது. இதன்படி பிரத்யேக குழாய் இணைப்பு மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

புதுச்சேரி, தெலுங்கானா, குஜராத், பஞ்சாப் உள்பட 11 மாநிலங்கள் ஜல் ஜீவன் திட்டத்தில் 100 சதவீத இலக்கை எட்டிவிட்டன. தமிழகத்தில் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் 1 கோடியே 25 லட்சத்து 26 ஆயிரத்து 665 வீடுகளுக்கு குடிநீருக்கான குழாய் இணைப்பு வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.

இதில், நேற்று வரையிலான நிலவரப்படி 1 கோடியே 11 லட்சத்து 61 ஆயிரத்து 65 வீடுகளுக்கு குடிநீருக்கான இணைப்பு கொடுக்கப்பட்டு உள்ளது. இது 89.10 சதவீதம் ஆகும். ஒட்டுமொத்தமாக இந்தியாவில் 19 கோடியே 36 லட்சத்து 45 ஆயிரத்து 942 வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதில் 15 கோடியே 67 லட்சத்து 32 ஆயிரத்து 86 வீடுகளுக்கு இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது. இது 80.94 சதவீதம் ஆகும்.

Tags:    

மேலும் செய்திகள்