மெரினா கடற்கரையை சுத்தப்படுத்த 100 தூய்மை பணியாளர்கள் - சென்னை மாநகராட்சி

மெரினா கடற்கரை தூய்மை பணியை சென்னை மாநகராட்சி தனியாருக்கு ஒப்படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.;

Update:2025-07-21 12:54 IST

சென்னை,

மெரினா கடற்கரையை சுத்தமாக வைத்திருக்கும் பணியில் இன்று முதல் 100 தூய்மை பணியாளர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர். உழைப்பாளர் சிலை முதல் கலங்கரை விளக்கம் வரை 2.4 கிமீ தூரத்திற்கு, காலை 6 மணி முதல் 2 மணி வரை, பிற்பகல் 2 மணி முதல் இரவு 10 மணி வரை தூய்மை பணியில் ஈடுபடவுள்ளனர்.

காலை 70 பணியாளர்களும், மாலை 30 பணியாளர்களும் தொடர்ந்து பணியில் இருப்பார்கள். மேலும் கடற்கரை மணல் பரப்பை தூய்மை படுத்தும் டிராக்டர்களும் தொடர்ந்து தூய்மை பணியில் ஈடுபடும்.

மெரினா கடற்கரை தூய்மை பணியை சென்னை மாநகராட்சி தனியாருக்கு ஒப்படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. மெரினா கடற்கரையை தூய்மையாக வைத்திருக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என சென்னை மாநகராட்சி வேண்டுகோள்.

Tags:    

மேலும் செய்திகள்