மறைவிடத்தில் பலாத்காரம்... வாலிபரை மிரட்டிய இளம்பெண்... அடுத்து நடந்த கொடூரம்

சுனில் என்ற வாலிபருடன் இளம்பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டது.;

Update:2025-07-27 11:56 IST

மும்பை,

மராட்டிய மாநிலம் சத்ரபதி சம்பாஜிநகர், மாலிவாடா பகுதியை சேர்ந்த இளம்பெண் தீபாலி(வயது19). இவர் தனது சகோதரியுடன் கன்னட் பகுதியில் வசித்து வந்தார். இவருக்கு வாஜிபூர் தாலுகா மாண்ட்கி பகுதியை சேர்ந்த சுனில்(22) என்ற வாலிபருடன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிமுகம் ஏற்பட்டு நட்பாக பழகி வந்தார். கடந்த 24-ந்தேதி மோட்டார் சைக்கிளில் 2 பேரும் புறப்பட்டு வெளியே சென்றனர்.

அப்போது அங்குள்ள ஒரு மறைவிடத்திற்கு சென்று திடீரென தீபாலியை கட்டாயப்படுத்தி சுனில் பலாத்காரம் செய்தார். இதன் பின்னர் தீபாலி தனக்கு ரூ.1 லட்சம் தரவேண்டும் எனவும் இல்லையெனில் தன்னை பலாத்காரம் செய்ததாக போலீசில் புகார் அளிக்க போவதாக மிரட்டினார்.இதனையடுத்து அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனால் ஆத்திரமடைந்த சுனில் அங்கு கிடந்த கல்லை எடுத்து தீபாலியின் தலையில் பலமாக தாக்கியுள்ளாா. இதில் தீபாலி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் இளம்பெண்ணின் உடலை தவுலாபாத் வனப்பகுதியில் வீசினார். மேலும், நேற்று சுனில், சிரூர் போலீஸ் நிலையத்திற்கு சென்று நடந்த சம்பவத்தை கூறி போலீசில் சரண் அடைந்தார்.

இதனை தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இளம்பெண் தீபாலியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் சுனில் மீது வழக்குப்பதிவு செய்து சுனிலை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்