வரதட்சணை கொடுமை; இளம்பெண்ணை அடித்துக்கொன்ற கணவர் குடும்பத்தினர் - அதிர்ச்சி சம்பவம்
ரூ. 5 லட்சம் வரதட்சணை கொடுக்கும்படி கொடுமைப்படுத்தியுள்ளனர்.;
லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டம் ரத்தன்புரி பகுதியை சேர்ந்த இளம்பெண் ஷமா (வயது 28). இவருக்கும் அனஸ் என்ற நபருக்கும் கடந்த 2023ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமண வரதட்சணையாக ஷமா குடும்பத்தினர் ரூ. 1 லட்சம் கொடுத்துள்ளனர்.
இதனிடையே, திருமணத்திற்குப்பின் கூடுதல் வரதட்சணை கேட்டு ஷமாவை அவரது கணவர் அனஸ் மற்றும் குடும்பத்தினர் துன்புறுத்தியுள்ளனர். ரூ. 5 லட்சம் வரதட்சணை கொடுக்கும்படி கொடுமைப்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில், ரூ. 5 லட்சம் வரதட்சணை கேட்டு ஷமாவை கணவர் அனஸ், மாமனார், மாமியார் மற்றும் குடும்பத்தினர் மீண்டும் தொல்லை கொடுத்துள்ளனர். மேலும், வரதட்சணை தராததால் ஷமாவை அனைவரும் சேர்ந்து கொடூரமாக தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் படுகாயமடைந்த ஷமா வீட்டிலேயே உயிரிழந்தார். இதையடுத்து அனஸ் உள்பட 5 பேரும் தலைமறைவாகினர். இந்த கொலை குறித்து தகவலறிந்த போலீசார், விரைந்து வந்து ஷமாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், ஷமாவை அடித்துக்கொலை செய்துவிட்டு தலைமறைவாக உள்ள அனஸ் உள்பட 5 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.