வரதட்சணை கொடுமை: இளம்பெண்ணை கழுத்தறுத்துக்கொன்ற கணவன் - அதிர்ச்சி சம்பவம்

சுவாதியை கொலை செய்துவிட்டு தப்பியோடிய ஜிஜேந்தரை தீவிரமாக தேடி வருகின்றனர்.;

Update:2025-08-19 18:52 IST

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத் மாவட்டம் கடனா கிராமத்தை சேர்ந்த இளம்பெண் சுவாதி (வயது 26). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஜிஜேந்தர் என்பவருக்கும் கடந்த 2022 டிசம்பரில் திருமணம் நடைபெற்றது.

திருமணமானதுமுதல் அதிக வரதட்சணை தருமாறு மனைவி சுவாதியை ஜிஜேந்திர் மற்றும் அவரது குடும்பத்தினர் தொந்தரவு கொடுத்துள்ளனர். இது தொடர்பாக கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், அதிக வரதட்சணை தருமாறு சுவாதியிடம் ஜிஜேந்திர் நேற்று இரவு மீண்டும் தகராறு செய்துள்ளார். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் கூர்மையான ஆயுதத்தால் மனைவி சுவாதியின் கழுத்தை அறுத்து ஜிஜேந்தர் கொடூரமாக கொலை செய்தார். இந்த சம்பவம் குறித்து அறிந்த போலீசார் விரைந்து சென்று சுவாதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சுவாதியை கொலை செய்துவிட்டு தப்பியோடிய ஜிஜேந்தரை தீவிரமாக தேடி வருகின்றனர். அதேவேளை, ஜிஜேந்தரின் தந்தை, தாயார், சகோதரனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

Tags:    

மேலும் செய்திகள்