மே.வங்கத்திற்கு திரும்பும் தொழிலாளர்களுக்கு மாதம் ரூ. 5 ஆயிரம் வழங்கப்படும் : மம்தா அறிவிப்பு

பிற மாநிலங்களில் இருந்து மேற்கு வங்கத்திற்கு திரும்பும் தொழிலாளர்களுக்கு, மாதம் 5,000 ரூபாய் வழங்கப்படும் என மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.;

Update:2025-08-19 20:14 IST

கொல்கத்தா,

புலம்பெயர்ந்த மேற்கு வங்க தொழிலார்களுக்காக 'ஷ்ரமஸ்ரீ' திட்டத்தை அம்மாநில முதல் மந்திரி மம்தா பானஜரி தொடங்கி வைத்தார். வேறு மாநிலங்களில் வேலை செய்துவரும் மேற்கு வங்க தொழிலாளர்களை சொந்த மாநிலத்துக்கு திரும்ப கொண்டுவருவதே இத்திட்டத்தின் நோக்கம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு மேற்கு வங்கத்திற்கு திரும்பும் தொழிலாளர்களுக்கு, மாதம் 5,000 ரூபாய் உதவித் தொகை வழங்கப்படும். இந்த உதவித் தொகையானது ஓராண்டுக்கோ அல்லது அவர்களுக்கு மேற்கு வங்கத்தில் வேலை கிடைக்கும் வரையோ வழங்கப்படும் .

மேற்கு வங்கம் திரும்பும் புலம்பெயர் தொழிலார்களுக்கு 'காத்யா சதி' திட்டத்தின் கீழ் உணவும், அவர்களது குழந்தைகளின் படிப்புக்கான செலவையும் மாநில அரசே ஏற்றுக்கொள்ளும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பேசிய மம்தா பானர்ஜி, "உதவியின்றி வேறு மாநிலங்களில் கஷ்டப்பட்டும், மொழியின் அடிப்படையில் மேற்கு வங்க தொழிலாளர்கள், குற்றவாளிகளாக மாற்றப்படுகிறார்கள். அவர்களை மீண்டும் மேற்கு வங்கத்திற்கு அழைத்துவரவே இத்திட்டம்" என்று கூறினார்.

எனினும், மேற்கு வங்க அரசின் இந்த திட்டத்தை விமர்சித்து பாஜகவின் சுவேந்து அதிகாரி, “"50,000 முதல் ஒன்றரை லட்சம் ரூபாய் வரை புலம்பெயர் தொழிலாளர்கள் சம்பாதிக்கின்றனர். வெறும் இந்த 5,000 ரூபாய் அவர்களுக்கு எந்தவிதத்திலும் உதவாது. புலம்பெயர் தொழிலாளர்கள் குஜராத்திலும், டெல்லியிலும், தென் மாநிலங்களிலும் மகிழ்ச்சியாக வாழ்கின்றனர்" என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்