புலிகள் சரணாலயத்தில் டிரோன் பறக்கவிட்ட யூடியூபருக்கு ரூ. 1 லட்சம் அபராதம்

அர்பஸ் அன்சாரி நண்பர்களுடன் புலிகள் சரணாலயத்திற்கு சென்றுள்ளார்.;

Update:2025-08-19 20:05 IST

லக்னோ,

உத்தரபிரதேசத்தை சேர்ந்த யூடியூபர் அர்பஸ் அன்சாரி. இவர் சமூகவலைதளத்தில் பல்வேறு வீடியோக்களை பகிர்ந்து பிரபலமானார்.

இந்நிலையில், அர்பஸ் அன்சாரி தனது நண்பர்களுடன் கடந்த சில நாட்களுக்குமுன் பிலிபிட் மாவட்டத்தில் உள்ள புலிகள் சரணாலயத்திற்கு சென்றுள்ளார். அங்கு உரிய அனுமதியின்றி டிரோனை பறக்கவிட்டு வனப்பகுதியை வீடியோ எடுத்துள்ளார்.

மேலும், அந்த வீடியோவை யூடியூப், இன்ஸ்டாகிராம் உள்பட சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ வைரலான நிலையில் அனுமதியின்றி புலிகள் காப்பகத்தில் டிரோன் பறக்கவிட்ட அர்பஸ் அன்சாரிக்கு வனத்துறையினர் ரூ. 1 லட்சம் அபராதம் விதித்தனர். மேலும், இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என்றும் யூடியூபர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்