மராட்டியம்: தொடர் மழைக்கு 10 பேர் பலி; அடுத்த 48 மணிநேரத்திற்கு கடும் எச்சரிக்கை

மராட்டியத்தின் மும்பையில், 300 மி.மீ. அளவுக்கு கனமழை பெய்து உள்ளது.;

Update:2025-08-19 21:45 IST

மும்பை,

மராட்டியத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் வீடுகள், கட்டிடங்கள் மற்றும் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. இதனால், மும்பை பெருநகரம் பெரிதும் பாதிக்கப்பட்டது. ரெயில், விமான சேவையும் பாதிக்கப்பட்டு உள்ளது. விதர்பா பகுதியில் உள்ள கத்சிரோலி மற்றும் மராத்வாடா பகுதியில் உள்ள நான்டெட் உள்பட பல்வேறு மாவட்டங்கள் கனமழையால் பெரிதும் பாதிப்படைந்து உள்ளது.

மராட்டியத்தில், கனமழை தொடர்பான சம்பவங்களில் சிக்கி 10 பேர் பலியாகி உள்ளனர். பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி போயுள்ளது. இதனை தொடர்ந்து, முதல்-மந்திரி பட்னாவிஸ் நிலைமையை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அவருடன் பேரிடர் மேலாண் துறையினரும் சென்றனர்.

இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அடுத்த 48 மணிநேரத்திற்கு மும்பை, தானே, ராய்காட், ரத்னகிரி மற்றும் சிந்துதுர்க் மாவட்டங்களுக்கு சோதனையான காலம். தொடர்ந்து அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என கூறினார்.

மும்பையில், 300 மி.மீ. அளவுக்கு கனமழை பெய்து உள்ளது. 12 முதல் 14 லட்சம் ஏக்கர்கள் வரையிலான நிலம் நீரில் மூழ்கி பாதிக்கப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்