அரபி கடலில் 2 மீன்பிடி படகுகள் மோதல்; 8 மீனவர்கள் மாயம்
அரபி கடலில் 2 மீன்பிடி படகுகள் மோதி கொண்டதில் 10 மீனவர்கள் வரை மீட்கப்பட்டு உள்ளனர்.;
வதோதரா,
குஜராத் மாநிலத்தின் கடலோரத்தில் அரபி கடல் பகுதியில் 2 மீன்பிடி படகுகள் இன்று நேருக்கு நேராக மோதி கொண்டன. இந்த சம்பவத்தில் படகுகளில் இருந்த மீனவர்கள் அனைவரும் நீருக்குள் மூழ்கினர். இதனை தொடர்ந்து மீட்பு பணி நடந்தது.
இதில், 10 மீனவர்கள் வரை மீட்கப்பட்டு உள்ளனர். எனினும், 8 மீனவர்களை காணவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். வானிலை மோசமடைந்து, அதனால், படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டு இருக்க கூடும் என தகவல் தெரிவிக்கின்றது. காணாமல் போன மீனவர்களை தேடும் மற்றும் மீட்கும் பணிகள் தொடர்ந்து வருகின்றன.