உலகின் முக்கிய சவால்களுக்கான தீர்வில் இந்தியா இன்றியமையாத பங்கு வகிக்கிறது: ஜனாதிபதி முர்மு

உலகின் மிக பெரிய ஜனநாயக நாடு என்பதுடன், நிலையான வளர்ந்து வரும் பொருளாதார சக்தி மிக்க நாடாகவும் இந்தியா உள்ளது என ஜனாதிபதி முர்மு கூறினார்.;

Update:2025-08-19 19:06 IST

புதுடெல்லி,

டெல்லி ஜனாதிபதி மாளிகையில் இந்திய வெளியுறவு துறையை சேர்ந்த பயிற்சி அதிகாரிகளுடனான ஜனாதிபதி திரவுபதி முர்முவின் சந்திப்பு இன்று நடந்தது. அவர், இதற்காக நடந்த கூட்டத்தில் பேசும்போது, நம்மை சுற்றியுள்ள உலகம் புவிஅரசியல் மாற்றங்கள், டிஜிட்டல் புரட்சி, பருவநிலை மாற்றம் மற்றும் பலதரப்பு விசயங்களில் விரைவான மாற்றம் கண்டு வருகிறது என நாம் பார்க்கிறோம்.

நீங்கள், ‘உலகம் ஒரு குடும்பம்’ என்ற மனநிலை கொண்டிருந்தபோதும், ‘தேசம் முதலில்’ என மனதில் கொள்ள வேண்டும் என்று பேசியுள்ளார். தொடர்ந்து அவர், உலகளாவிய வடக்கு மற்றும் தெற்கு ஆகிய பகுதிகளுக்கு இடையேயான வேற்றுமை சார்ந்த விவகாரங்கள் உள்ளபோதும், எல்லை கடந்த பயங்கரவாதம் அல்லது பருவநிலை மாற்ற தாக்கங்கள் உள்ளிட்ட உலகளவிலான முக்கிய சவால்களுக்கான தீர்வுக்கு இந்தியா இன்றியமையாத பங்கு வகிக்கின்றது என்றும் கூறினார்.

இந்தியா, உலகின் மிக பெரிய ஜனநாயக நாடு என்பது மட்டுமின்றி, நிலையான வளர்ந்து வரும் பொருளாதார சக்தி மிக்க நாடாகவும் உள்ளது என்றும் அவர் கூறினார்.

போரால் பாதிக்கப்பட்ட ஏமனில் இருந்து 2015-ம் ஆண்டு, இந்தியர்கள் மற்றும் வெளிநாட்டினரை மீட்டு கொண்டு வந்த மிக பெரிய ஆபரேஷன் ராகத் முதல், நடப்பு ஆண்டில் நடந்த ஆபரேஷன் சிந்தூர் வரை நம்முடைய மக்களை பாதுகாப்பதில் ஈடுஇணையற்ற ஈடுபாட்டுடன் மத்திய அரசு செயல்பட்டு உள்ளது என்றும் ஜனாதிபதி திரவுபதி முர்மு கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்