தெலுங்கானா: பண்டிகை கொண்டாட்டத்தில் துயரம்; மின்கம்பி உரசி 2 நாட்களில் 9 பேர் பலி

தெலுங்கானாவின் ஐதராபாத் நகரில் கடவுள் கிருஷ்ணரின் தேரை இழுத்து சென்றபோது, மின்கம்பி உரசியதில் 5 பேர் பலியானார்கள்.;

Update:2025-08-19 17:32 IST

ஐதராபாத்,

தெலுங்கானாவில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு நடந்த திருவிழா கொண்டாட்டங்களின்போது ஏற்பட்ட மின் விபத்தில் சிக்கி பலர் உயிரிழந்த அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.

இதன்படி, ஐதராபாத் மற்றும் காமாரெட்டி மாவட்டங்களில் பலர் உயிரிழந்து உள்ளனர். இதில், ஐதராபாத் நகரில் ஆம்பர்பேட்டை பகுதியில், விநாயக மண்டபம் அமைக்கும்போது ஒருவர் பலியானார். பந்தலகுடா பகுதியில் சிலையை தூக்கி சென்றபோது, மின்கம்பி உரசியதில் 2 பேர் உயிரிழந்தனர்.

இதுதவிர மற்றொரு சம்பவத்தில், ராமந்தப்பூரில் கடவுள் கிருஷ்ணரின் தேரை இழுத்து சென்றபோது, மின்கம்பி உரசியதில் 5 பேர் பலியானார்கள். 4 பேர் காயமடைந்தனர். அவர்களில் 2 பேரின் நிலைமை கவலைக்குரிய வகையில் உள்ளது.

இதேபோன்று, காமாரெட்டி மாவட்டத்தின் ஆரேபள்ளி பகுதியில், விநாயகர் சிலையை தூக்கி சென்ற லட்சுமி நாராயணா (வயது 25) என்பவர் மின்கம்பி உரசியதில் பலியானார். பண்டிகை கொண்டாட்டத்தின்போது, மின்கம்பி உரசி 2 நாட்களில் 9 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் பொதுமக்கள் பாதுகாப்பாக பண்டிகையை கொண்டாட அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்