துணை ஜனாதிபதி தேர்தல்: 20-ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்கிறார் சி.பி.ராதாகிருஷ்ணன்

புதிய துணை ஜனாதிபதி தேர்தல் செப்டம்பர் 9-ந் தேதி நடைபெற உள்ளது.;

Update:2025-08-18 19:27 IST

புதுடெல்லி,

இந்திய துணை ஜனாதிபதியாக இருந்தவர், ஜெகதீப் தன்கர். நாட்டின் 16-வது துணை ஜனாதிபதியாக கடந்த 2022-ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், கடந்த மாதம் 21-ந் தேதி திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார்.

தன்கர் ராஜினாமா செய்ததை தொடர்ந்து, புதிய துணை ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான ஆயத்தப்பணிகளை தேர்தல் கமிஷன் தொடங்கியது. அதன்படி, புதிய துணை ஜனாதிபதி தேர்தல் செப்டம்பர் 9-ந் தேதி நடைபெறும் என தேர்தல் கமிஷன் அறிவித்தது. நாடாளுமன்றத்தில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும், அதைத்தொடர்ந்து உடனே வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவு அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, துணை ஜனாதிபதி தேர்தல் செப்டம்பர் மாதம் 9-ந்தேதி நடைபெற உள்ள நிலையில், பாஜக கூட்டணி வேட்பாளராக சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டு உள்ளார். பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடைபெற்ற ஆட்சிமன்றக்குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. துணை ஜனாதிபதி வேட்பாளராக தேர்வாகி இருக்கும் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த தலைவர்களும் வாழ்த்துகளை கூறி வருகின்றனர்.

இந்த நிலையில், துணை ஜனாதிபதி தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சி.பி. ராதாகிருஷ்ணன், வருகிற 20-ம் தேதி தனது வேட்பு மனுவை தாக்கல் செய்ய உள்ளார். இந்நிகழ்வில் பிரதமர் மோடி, பாஜக தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய மந்திரிகள், தே.ஜ.கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்பார்கள் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்