33 வயது வாலிபருடன் மனைவி உல்லாசம்... கண்டித்த கணவர்... அடுத்து நடந்த கொடூரம்
சுப்பிரமணியா புதிதாக ஒரு வீடு கட்டியுள்ளார்.;
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் சிக்கமகளூரு மாவட்டம் கடூர் தாலுகா கம்சாகரா கிராமத்தில் வசித்து வந்தவர் சுப்பிரமணியா. இவரது மனைவி மீனாட்சி(வயது 53). தையல்காரரான சுப்பிரமணியாவை கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மர்ம நபர்கள் படுகொலை செய்தனர். மேலும் அவரது உடலை மர்ம நபர்கள் தீவைத்து எரித்து இருந்தனர்
இதுதொடர்பாக கடூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன. அதாவது சுப்பிரமணியாவின் மனைவி மீனாட்சிக்கும், அவரது உறவினரின் மகனான பிரதீப்(33) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு அது கள்ளத்தொடர்பாக மாறி உள்ளது. அதாவது சுப்பிரமணியா புதிதாக ஒரு வீடு கட்டியுள்ளார். அந்த வீட்டில் ஆசாரி வேலைக்கு சென்றவர் தான் பிரதீப் ஆவார்.
உறவினரின் மகன் என்பதால் பிரதீப்பிடம், மீனாட்சி நெருங்கி பழகினார். அதை சுப்பிரமணியாவும் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. இது நாளடைவில் அவர்களுக்கு இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். இதுபற்றி அறிந்த சுப்பிரமணியா தனது மனைவி மீனாட்சியையும், பிரதீப்பையும் அழைத்து கண்டித்துள்ளார்.
மேலும் கள்ளத்தொடர்பை கைவிட்டு விடும்படி எச்சரித்து இருக்கிறார். ஆனால் கள்ளத்தொடர்பை கைவிட மனமில்லாத மீனாட்சியும், பிரதீப்பும் சுப்பிரமணியாவை கொலை செய்திட முடிவு செய்தனர். இதற்காக பிரதீப், தனது நண்பர்களான சித்தேஷ் மற்றும் விகாஷ் ஆகியோரிடம் உதவி கேட்டுள்ளார். அவர்களும் இந்த கொலை திட்டத்தை அரங்கேற்ற உதவுவதாக ஒப்புக்கொண்டனர்.
அதன்பேரில் சம்பவத்தன்று அவர்கள் 3 பேரும் சேர்ந்து சுப்பிரமணியாவை கொலை செய்து உடலை தீவைத்து எரித்ததும், அதற்கு மீனாட்சியும் உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது. பின்னர் மீனாட்சி உள்பட 4 பேரும் தலைமறைவாகினர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வந்தனர். இதையடுத்து மீனாட்சியும், பிரதீப் மற்றும் அவரது நண்பர்களும் பதுங்கி இருக்கும் இடம் போலீசாருக்கு தெரியவந்தது. அதன்பேரில் அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.