இன்னும் ரூ.6,017 கோடி மதிப்பிலான ரூ.2,000 நோட்டுகள் திரும்பி வரவில்லையா..? - என்ன சொல்கிறது மத்திய அரசு
1.69 சதவீதம் ரூ.2,000 நோட்டுகள் மட்டும் இன்னும் ரிசர்வ் வங்கிக்கு திரும்பவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.;
கோப்புப்படம்
புதுடெல்லி,
ஒடிசாவின் பிஜூ ஜனதா தளம் கட்சி எம்.பி. பர்துருஹரி மெஹ்தாப், மக்களவையில் ரூ.2,000 நோட்டுகள் தொடர்பாக சில கேள்விகளை கேட்டிருந்தார்.
அதற்கு மத்திய நிதித்துறை இணை மந்திரி பங்கஜ் சவுத்ரி நேற்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறப்பட்டு இருப்பதாவது:-
2023-ம் ஆண்டு மே 19-ந்தேதி ரூ.2,000 நோட்டுகளை திரும்பப்பெற முடிவு செய்யப்பட்டது. ரிசர்வ் வங்கியின் தகவல்படி, 2023-ம் ஆண்டு மே 19-ந்தேதியன்று ரூ.3.56 லட்சம் கோடியாக இருந்த 2,000 ரூபாய் நோட்டுகளின் மொத்த மதிப்பு கடந்த ஜூலை 31-ந்தேதியன்று ரூ.6,017 கோடியாகக் குறைந்துள்ளது. அதாவது 1.69 சதவீதம் ரூ.2,000 நோட்டுகள் மட்டும் இன்னும் ரிசர்வ் வங்கிக்கு திரும்பவில்லை.
இவ்வாறு பதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.