காஷ்மீர் மேகவெடிப்பு: பலி எண்ணிக்கை 63 ஆக உயர்வு

வெள்ளத்தில் சிக்கி மாயமான 3 பேரின் உடல்கள் நேற்று மீட்கப்பட்டன.;

Update:2025-08-19 01:36 IST

காஷ்மீர்,

ஜம்மு மற்றும் காஷ்மீர் யூனியன் பிரதேசத்திற்கு உட்பட்ட கிஷ்த்வார் மாவட்டம் சிசோடி கிராமத்தில் கடந்த 14-ந்தேதி திடீரென ஏற்பட்ட மேக வெடிப்பால் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் அங்குள்ள ஆற்றில் திடீர் என வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அந்த கிராமத்தில் இருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ள மச்சைல் மாதா மலைக்கோவிலுக்கு செல்ல அங்கு குவிந்திருந்த ஏராளமான பக்தர்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர்.

மலைப்பாதையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், ஒரு சில இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டது. இதில் நூற்றுக்கணக்கானோர் சிக்கி கொண்டனர். மலைப்பாதையில் இருந்த வீடுகள், கட்டிடங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. இந்த வெள்ளத்தில் சிக்கி 2 மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் உள்பட 60 பேர் உயிரிழந்தனர். மேலும் சிலர் காணாமல் போனார்கள்.

இந்நிலையில் இந்த வெள்ளத்தில் சிக்கி மாயமான 3 பேரின் உடல்கள் நேற்று மீட்கப்பட்டன. இதனால் காஷ்மீர் வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 63 ஆக உயர்ந்தது.

Tags:    

மேலும் செய்திகள்