பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு தண்டனை: நடிகை ரம்யா மகிழ்ச்சி

பாலியல் வன்கொடுமை வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு சாகும்வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.;

Update:2025-08-03 06:50 IST

பெங்களூரு,

வேலைக்கார பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஹாசன் தொகுதி முன்னாள் எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு சாகும்வரை சிறை தண்டனை விதித்து பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு கூறியுள்ளது. மேலும் இந்த வழக்கில் அவர் மீது பதிவான சட்டப்பிரிவுகளின் அடிப்படையில் ஒட்டு மொத்தமாக ரூ.11 லட்சத்து 50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

இந்த நிலையில், இதுகுறித்து நடிகை ரம்யா மகிழ்ச்சி தெரிவித்து தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார். அதில், "சட்டம் அனைவருக்கும் ஒன்றே. பெண்களுக்கு எதிரான அனைத்து குற்றங்களுக்கும் கடுமையான தண்டனை கிடைக்கிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்தில் அவர் நடிகர் தர்ஷன் மீதான கொலை வழக்கில் ரேணுகாசாமிக்கு நீதி கிடைக்கும் என்று சமூக வலைதளத்தில் கருத்து வெளியிட்டார். அதற்கு தர்ஷனின் ரசிகர்கள் அவரை ஆபாசமாக திட்டி தீா்த்தனர். இதுகுறித்து அவர் போலீசில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் தர்ஷனின் ரசிகர்கள் மீது வழக்குப்பதிவு செய்து சிலரை கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்