ஜனாதிபதி திரவுபதி முர்முவுடன் பிரதமர் மோடி சந்திப்பு

நாட்டின் 79ஆவது சுதந்திர தினம் வரும் 15-ம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ள நிலையில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.;

Update:2025-08-03 14:24 IST

புதுடெல்லி,

ஜனாதிபதி திரவுபதி முர்முவை பிரதமர் மோடி இன்று சந்தித்து பேசினார். டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இந்த சந்திப்பு நடைபெற்றது. மரியாதை நிமித்தமாக சந்திப்பு நடைபெற்று இருக்கலாம் எனத்தெரிகிறது. நாட்டின் 79ஆவது சுதந்திர தினம் வரும் 15ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ள நிலையில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர், பஹல்காம் பயங்கரவாதிகளை அழித்த ஆபரேஷன் மகாதேவ் உள்ளிட்டவை பற்றியும் இருவரும் பேசியதாக தகவல் தெரிய வந்துள்ளது. இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா 25 சதவீதம் வரி விதித்த விவகாரம், துணை ஜனாதிபதி தேர்தல் அறிவிப்பு உள்ளிட்ட பல்வேறு முக்கிய நிகழ்வுகளுக்கு மத்தியில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது கவனம் பெற்றுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்