தங்கையின் வீட்டில் தங்கியதால் ஆத்திரம்; கர்ப்பிணியை குத்திக்கொன்ற கணவர்

ஸ்வப்னாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.;

Update:2025-08-03 10:56 IST

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் மீரட் மாவட்டம் ஜிதவ் கேட் பகுதியை சேர்ந்தவர் ரவிசங்கர் (வயது 28). இவரது மனைவி ஸ்வப்னா (வயது 25). கடந்த ஜனவரி மாதம் திருமணமான நிலையில் ஸ்வப்னா 7 கர்ப்பிணியாக இருந்தார்.

இதனிடையே, திருமணமானது முதல் கணவன் , மனைவி இடையே மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், ஸ்வப்னா கடந்த 5 மாதங்களாக தனது தங்கையின் வீட்டில் தங்கியுள்ளார். ஸ்வப்னாவின் தங்கைக்கு திருமணமான நிலையில், அவரது வீட்டில் தங்கியுள்ளார். மனைவி அவரது சகோதரி வீட்டில் தங்கி இருந்ததால் ரவிசங்கர் மிகுந்த ஆத்திரமடைந்துள்ளார்.

இந்நிலையில், ரவிசங்கர் நேற்று தனது மனைவியின் சகோதரி வீட்டிற்கு சென்றுள்ளார். மனைவியை சமாதானம் செய்வதுபோல் பேசியுள்ளார். மேலும், தனியாக பேச வேண்டும் என்று கூறிய ரவிசங்கர் மனைவி ஸ்வப்னாவை வீட்டில் உள்ள அறைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு வைத்து தான் மறைத்து கொண்டுவந்த கத்தியால் கர்ப்பிணி மனைவி ஸ்வப்னாவை சரமாரியாக குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த ஸ்வப்னா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மனைவியை கொலை செய்த ரவிசங்கர் இதுகுறித்து போலீசாருக்கு செல்போனில் தொடர்பு கொண்டு தகவல் கொடுத்துள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார், சம்பவம் நடைபெற்ற வீட்டிற்கு விரைந்து சென்று ரவிசங்கரை கைது செய்தனர். மேலும், உயிரிழந்த கர்ப்பிணி ஸ்வப்னாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்