மலையாள அறிஞர் எம்.கே.சானு காலமானார்

மலையாளத்தில் உள்ள பல முக்கியமான நபர்களின் வாழ்க்கை சரித்திரம் அனைத்தும் எம்.கே. சானுவால் எழுதப்பட்டது.;

Update:2025-08-03 08:29 IST

திருவனந்தபுரம்,

கேரளாவில் பிரபல மலையாள அறிஞர் எம்.கே.சானு(வயது 98). இவர், பேராசிரியர், எழுத்தாளர், சமூக சிந்தனையாளரும் ஆவார். இதற்கிடையே வயோதிகம் காரணமாக எம்.கே.சானு உடல்நலக்குறைவு ஏற்பட்டு எர்ணாகுளத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்தநிலையில் அவர், நேற்று மரணம் அடைந்தார். அவரது மரணத்துக்கு இலக்கியத்துறையை சேர்ந்தவர்கள், அரசியல் தலைவர்கள் உள்பட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ஆலப்புழா மாவட்டம் எம்.சி.கேசவன்- பவானி அம்மா தம்பதிக்கு மகனாக கடந்த 1928-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 27-ந்தேதி எம்.கே.சானு பிறந்தார். மலையாளத்தில் உள்ள பல முக்கியமான நபர்களின் வாழ்க்கை சரித்திரம் அனைத்தும் எம்.கே. சானுவால் எழுதப்பட்டது.

இவர், மலையாள மொழியின் சப்தம் என்று மலையாள அறிஞர்களால் பெருமையுடன் அழைக்கப்பட்டார். மேலும் சாகித்ய அகாடமி விருது மற்றும் பவனன் விருது, வயலார் விருது, பத்ம விருது, எழுத்தச்சன் விருது உள்பட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார். இவரது உடல் இன்று காலை வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அதன்பின்னர் மாலை அவரது உடல் ரவிபுரம் மயானத்திற்கு எடுத்து செல்லப்பட்டு இறுதிச்சடங்கு செலுத்தி அடக்கம் செய்யப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்