திருட வந்ததாக நினைத்து நேபாள பெண்ணை மின்கம்பத்தில் கட்டி வைத்து தாக்கிய கொடூரம் - அதிர்ச்சி வீடியோ

வீட்டின் மொட்டை மாடிக்கு சென்ற சுஷ்மிதா அங்கு நின்றவாறு பேசிக்கொண்டிருந்தார்;

Update:2025-08-03 11:21 IST

லக்னோ,

நேபாள நாட்டின் போஹாரா மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண் சுஷ்மிதா சரு மஹர். இவர் வேலை தேடி இந்தியா வந்துள்ளார். உத்தரபிரதேசத்தின் பரேலி மாவட்டம் பரடரி பகுதியில் உள்ள வீட்டில் வாடகைக்கு வசித்து வந்தார்.

இந்நிலையில், நேற்று இரவு 1 மணியளவில் செல்போனில் வந்த அழைப்பை தொடர்ந்து வீட்டின் மொட்டை மாடிக்கு சென்ற சுஷ்மிதா அங்கு நின்றவாறு பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது, அந்த பகுதியை சேர்ந்த சிலர், சுஷ்மிதாவை திருட வந்த பெண் என நினைத்து அவரை பிடிக்க முயற்சித்துள்ளனர். அந்த கும்பல் மிரட்டும் வகையில் கூச்சலிட்டு சுஷ்மிதாவை பிடிக்க முயற்சித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த சுஷ்மிதா மொட்டை மாடியில் இருந்து கீழே குதித்துள்ளார். இதில் காலில் அவருக்கு காயம் ஏற்பட்ட நிலையில் அந்த கும்பல் சுஷ்மிதாவை கொடூரமாக தாக்கியது. மேலும், அவரை மின்கம்பத்தில் கட்டி வைத்து கட்டை உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கினர்.

இந்த சம்பவத்தில் காயமடைந்த சுஷ்மிதா, தான் திருடவரவில்லை இங்கு வாடகைக்கு வசித்து வருகிறேன் என கூறியுள்ளார். ஆனாலும், சமாதானம் ஆகாத அந்த கும்பல் அவரை தொடர்ந்து தாக்கியது. இந்த சம்பவம் குறித்து அறிந்த போலீசார் விரைந்து சென்று சுஷ்மிதாவை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மேலும், அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் , சுஷ்மிதாவை தாக்கிய கவுரவ் சக்சேனா, சிவம் சக்சேனா, அமன் சக்சேனா, அருண் சைனி ஆகியோரை கைது செய்துள்ளனர். மேலும், தலைமறைவாக உள்ள மேலும் சிலரை தேடி வருகின்றனர். சுஷ்மிதாவை கும்பலாக சேர்ந்து அப்பகுதியினர் தாக்கிய வீடியோ தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. 


Tags:    

மேலும் செய்திகள்