நகைக்கடையில் கத்தி முனையில் ரூ. 17 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் கொள்ளை
போலீசார் சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகின்றனர்.;
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் பெங்களூரு புறநகர் மாவட்டம் நெலமங்கலா பகுதியில் நகைக்கடை உள்ளது. இந்த நகைக்கடையில் கடந்த 24ம் தேதி இரவு ஊழியர்கள் வழக்கம்போல் கடையை மூட தயாராகிக்கொண்டிருந்தனர்.
அப்போது, முகமூடி அணிந்து கத்தியுடன் நகைக்கடைக்குள் கும்பல் நுழைந்தது. அந்த கும்பல், நகைக்கடை ஊழியர்களை கத்தி முனையில் மிரட்டி கடையில் இருந்து 17 லட்ச ரூபாய் மதிப்புள்ள தங்கநகைகளை கொள்ளையடித்து காரில் தப்பிச்சென்றது.
இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக நகைக்கடை உரிமையாளர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகின்றனர்.