காஷ்மீரில் கண்ணிவெடி தாக்குதல் - அக்னிவீரர் உயிரிழப்பு
உயிரிழந்த வீரர் லலித் குமார், அக்னிபாத் திட்டத்தின் கீழ் ராணுவத்தில் சேர்ந்தவர் ஆவார்.;
ஸ்ரீநகர்,
காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த கண்ணிவெடி வெடித்துச் சிதறியதில் ஒரு ராணுவ வீரர் உயிரிழந்தார். மேலும் 2 பேர் படுகாயமடைந்தனர்.
இதில் உயிரிழந்த வீரர் லலித் குமார், அக்னிபாத் திட்டத்தின் கீழ் ராணுவத்தில் சேர்ந்தவர் ஆவார். காயமடைந்த இருவரும் ராணுவ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.