இந்திய ராணுவத்திற்கு வான் பாதுகாப்பு ரேடார்கள் வாங்க ரூ.2,000 கோடிக்கு பாதுகாப்புத்துறை ஒப்பந்தம்

அனைத்து வகையான வான்வழி அச்சுறுத்தல்களையும் ரேடார்களால் கண்டறிய முடியும் என பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.;

Update:2025-07-25 17:15 IST

புதுடெல்லி,

இந்திய ராணுவத்திற்கு வான் பாதுகாப்பு ரேடார்களை வாங்குவதற்காக பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) நிறுவனத்துடன் ரூ.2,000 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் இன்று கையெழுத்திட்டது.

எதிரிகளின் போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் டிரோன்கள் உள்பட அனைத்து வகையான வான்வழி அச்சுறுத்தல்களையும் இந்த வான் பாதுகாப்பு ரேடார்களால் கண்டறிய முடியும் என பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

'இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்டது, உருவாக்கப்பட்டது மற்றும் தயாரிக்கப்பட்டது' என்ற கட்டமைப்பின் கீழ் இந்த கொள்முதல் செயல்படுத்தப்படுகிறது. இது வான் பாதுகாப்பு படைப்பிரிவுகளை நவீனமயமாக்குவதில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல் என்றும், இந்திய ராணுவத்தின் செயல்பாட்டுத் தயார்நிலையை மேம்படுத்துவதோடு, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் இது பங்களிக்கும் என்றும் பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்