சாதிவாரி கணக்கெடுப்பை முன்பே செய்ய முடியாமல் போனது என் தவறு - ராகுல் காந்தி

காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.;

Update:2025-07-25 16:44 IST

புதுடெல்லி,

டெல்லியில் நடந்த ஓபிசி மாநாட்டில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பேசியதாவது:-

தனது 21 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் ஒரு "தவறு" செய்துவிட்டேன், அது இதர பிற்படுத்தப்பட்டோர் (ஓபிசி) பிரிவின் நலன்களைப் பாதுகாக்கத் தவறிவிட்டேன்.நான் 2004 முதல் அரசியலில் இருந்து வருகிறேன், 21 ஆண்டுகள் ஆகின்றன, நான் திரும்பிப் பார்த்து சுய பகுப்பாய்வு செய்யும்போது, நான் செய்ததெல்லாம் சரியானது, எங்கே தவறியது என்பது இரண்டு-மூன்று பெரிய பிரச்சினைகளை நான் காண்கிறேன். நான் ஓபிசி பிரிவை நான் பாதுகாக்க வேண்டிய விதத்தில் பாதுகாக்கவில்லை. 10-15 ஆண்டுகளுக்கு முன்பு ஓபிசி பிரிவின் பிரச்சினைகளை ஆழமாகப் புரிந்து கொள்ள முடியவில்லை.

சாதி கணக்கெடுப்பை முன்பே செய்ய முடியாமல் போனது என் தவறு. காங்கிரஸ் கட்சியுடையது அல்ல.இப்போது அதை நான் சரி செய்கிறேன். காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம். ஓபிசிக்களின் பிரச்சினைகள் மறைக்கப்பட்டதை எளிதாக பார்க்க முடியாது.ஓபிசி, பழங்குடியினர் மக்களின் தங்கள் உழைப்புகான பலனை பாஜக ஆட்சியில் இன்னும் பெறவில்லை.

ஓபிசி வரலாற்றை ஆர்.எஸ்.எஸ்., பாஜக வேண்டுமென்றே அழித்துவிட்டன. பிரதமர் மோடியிடம் எந்த அதிகாரமும் இல்லை. நாட்டின் உற்பத்தி சக்திக்கு மரியாதை கிடைக்க செய்வதே என் நோக்கம். பிரதமர் மோடி எனக்கு பெரிய பிரச்சினை இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்