ராணுவம் அதிகபட்ச தயார் நிலையில் இருக்க வேண்டும்- முப்படை தலைமை தளபதி பேச்சு

பயங்கரவாதத்துக்கு எதிரான இந்த ராணுவ நடவடிக்கை இன்னும் முடியவில்லை என்று முப்படை தலைமை தளபதி கூறினார்.;

Update:2025-07-26 04:28 IST

புதுடெல்லி,

காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய காட்டுமிராண்டித்தனமான தாக்குதலுக்கு இந்தியா தகுந்த பதிலடி கொடுத்தது. ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் நடந்த ராணுவ தாக்குதலில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் பெரிய இழப்பை சந்தித்தனர்.

பயங்கரவாதத்துக்கு எதிரான இந்த ராணுவ நடவடிக்கை இன்னும் முடியவில்லை என முப்படை தலைைம தளபதி அனில் சவுகான் கூறியுள்ளார். டெல்லியில் நேற்று நடந்த ராணுவம் தொடர்பான கருத்தரங்கு ஒன்றில் பேசும்போது இதை அவர் தெரிவித்தார். மேலும் வீரர்கள் வீரத்திலும், அறிவிலும் சிறந்தவர்களாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தினார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

ஒரு போரில் 2-ம் இடம் பெறுபவர்கள் யாரும் இல்லை. எந்த ராணுவமும் தொடர்ந்து உஷாராகவும், தயார் நிலையை பேணுபவர்களாகவும் இருக்க வேண்டும். உதாரணமாக ஆபரேஷன் சிந்தூரை எடுத்துக்கொண்டால், அது தற்போதும் தொடர்கிறது.

நமது தயார் நிலை அளவு 365 நாட்களும், 24 மணி நேரமும் அதிகபட்சமாக இருக்க வேண்டும். ஒன்றிணைந்த ஒரு போர் சூழலில் ஒரு எதிர்கால போர் வீரன் என்பவன் ஒரு தகவல் வீரன், தொழில்நுட்ப வீரன், நிபுணத்துவ வீரன் என ஒரு கலவையாக இருக்க வேண்டும்.இவ்வாறு அனில் சவுகான் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்