கரைபுரண்டு ஓடிய வெள்ளம் - திடீரென ஆற்றுக்குள் இறங்கிய காட்டு யானை..வெளியான அதிர்ச்சி காட்சி
ஆற்று வெள்ளத்தில் இறங்கிய காட்டு யானை, தத்தளித்தபடி மறுகரைக்கு சென்றது.;
கேரளா,
கேரள மாநிலம் அதிரப்பள்ளியில் பெருக்கெடுத்து ஓடிய சால்குடி ஆற்றில் இறங்கிய காட்டு யானை ஒரு கரையில் இருந்து மறு கரைக்கு கடந்து செல்லும் அதிர்ச்சி காட்சி வெளியாகி உள்ளது.
நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக பெருங்கல்குத்து அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால், சாலக்குடி ஆற்றில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
அப்போது திடீரென கரைபுரண்டு ஓடும் ஆற்று வெள்ளத்தில் இறங்கிய காட்டு யானை, தத்தளித்தபடி மறுகரைக்கு சென்றது. வெள்ளத்தை தத்தளித்தபடி கடக்கும் யானையின் வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.