மும்பையில் வெளுத்து வாங்கும் கனமழை; போக்குவரத்து கடும் பாதிப்பு

மும்பையில் கனமழை பெய்து வருவதால் முக்கிய பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன.;

Update:2025-08-18 19:12 IST

மும்பை. 

மும்பையில் கடந்த சில நாட்களாக கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதற்கு மத்தியில் ஆந்திரா அருகே வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதனால், மகராஷ்டிராவில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.

இதன்படி இன்று மும்பை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது. அதிகாலை பெய்த மழையால் அந்தேரி, காட்கோபர், நவி மும்பை மற்றும் தெற்கு மும்பையின் சில பகுதிகளில் தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. ரயில், விமான சேவைகள் பாதிக்கப்பட்டு உள்ளன.

கனமழைக்கு மத்தியில் மும்பை மாநகராட்சி, அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளது. தொடர்ந்து கனமழை பெய்து வருவதாலும், நகரம் முழுவதும் தண்ணீர் தேங்குவதாலும், அத்தியாவசிய தேவைகள் தவிர, தேவையின்றி மக்கள் வீடுகளை விட்டு வெளியே செல்வதைத் தவிர்க்குமாறு மும்பை மாநகராட்சி கேட்டுக் கொண்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்