தொடர் விடுமுறை: திருப்பதியில் குவிந்த பக்தர்கள் கூட்டம்
பக்தர்கள் ஷீலா தோரணம் வரை 5 கி.மீ. தூரம் தரிசனத்துக்காக காத்திருந்தனர்.;
திருப்பதி,
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தொடர் விடுமுறை என்பதால் நேற்று முதல் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வந்தது. இன்று காலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் பக்தர்கள் தங்க வைக்கப்பட்டு தரிசனத்துக்கு செல்லும் வைகுண்டம் அறைகள் மற்றும் நாராயணகிரி கொட்டகை முழுவதும் நிரம்பியது. பக்தர்கள் ஷீலா தோரணம் வரை 5 கி.மீ. தூரம் தரிசனத்துக்காக காத்திருந்தனர்.
அதிக அளவில் வாகனங்களில் பக்தர்கள் வந்ததால் மலை அடிவாரத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அலிபிரி முதல் கருடன் சிலை வரை வாகனங்கள் நகர முடியாமல் நின்றன. அதனை போலீசார் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். திருப்பதி தேவஸ்தானம் சார்பில் தன்னார்வலர்கள் மூலம் பக்தர்களுக்கு தேவையான உணவு, குடிநீர், பால், காபி உள்ளிட்ட பொருட்களை வழங்கினர்.
திருப்பதியில் நேற்று 87 ஆயிரத்து 759 பேர் தரிசனம் செய்தனர். 42 ஆயிரத்து 43 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ. 4.16 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 24 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.