8 ஆண்டுகளாக பேச முடியாத சிறுவனை பேசவைத்த ராணுவ டாக்டர்

சிறுவனுக்கு தனிப்பட்ட முறையில் கடந்த 8 வாரங்களாக பயிற்சி அளித்தார்.;

Update:2025-08-17 21:22 IST

ஜம்மு,  

காஷ்மீரின் கதுவா மாவட்டம் டக்கன் உயர்நிலைப்பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வருபவன் அக்‌ஷய் சர்மா (வயது 8). உதடு பிளவுடன் பிறந்த இந்த சிறுவனுக்கு 3 வயதில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இருந்தாலும் அவனால் பேச முடியவில்லை. தங்கள் மகனை பேசவைக்க பல்வேறு ஆஸ்பத்திரிகளில் அவனது பெற்றோர் சிகிச்சைக்கு அழைத்து சென்றனர். ஆனால் சிறுவனுக்கு பேச்சு வரவில்லை. அதிகம் செலவாகும் என்பதால் பெற்றோருக்கு அதற்கு மேல் சிகிச்சை அளிக்க முடியவில்லை,

இந்நிலையில் அப்பகுதியில் பணியாற்றும் ராணுவ டாக்டரான கேப்டன் சவுரப் சலுங்கே என்வரிடம் அக்‌ஷய் சர்மாவை சிகிச்சைக்கு அழைத்து சென்றனர். சிறுவனை பரிசோதித்த டாக்டர் பேச்சு தெரபி சிகிச்சை மூலம், சிறுவனை பேசவைக்க முடியும் என அவனுடைய பெற்றோருக்கு நம்பிக்கை தெரிவித்தார். சிறுவனுக்கு தனிப்பட்ட முறையில் கடந்த 8 வாரங்களாக பயிற்சி அளித்தார்.டாக்டரின் தீவிர முயற்சியால் சிறுவன் பேச தொடங்கினான். 8 ஆண்டுகளாக தங்களது மகன் பேச்சுவராமல் தற்போது பேசுவதை பார்த்து பெற்றோர் டாக்டருக்கு நன்றி தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்