65 வயது மூதாட்டியை புதருக்குள் தூக்கி சென்று பலாத்காரம் செய்த வாலிபர் கைது

65 வயது மூதாட்டியை புதருக்குள் தூக்கி சென்று பலாத்காரம் செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.;

Update:2025-08-17 20:42 IST

கொல்லம்,

கேரள மாநிலம் கொல்லம் பகுதியை சேர்ந்தவர் 65 வயது மூதாட்டி. இவர் சம்பவத்தன்று தனது வீட்டில் இருந்து அருகில் உள்ள ஒரு கோவிலுக்கு சென்றுள்ளார். பின்னர் திரும்பி வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அவரை மர்ம நபர் ஒருவர் பின்தொடர்ந்து வந்துள்ளார். இதனை மூதாட்டி கவனிக்கவில்லை.

பின்னர் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் மூதாட்டி வந்த போது அந்த மர்ம நபர் மூதாட்டியை அருகில் உள்ள புதருக்குள் தூக்கி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் இதுபற்றி யாரிடமாவது கூறினால் கொன்று விடுவதாக மிரட்டி விட்டு அவர் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார். அந்த சமயத்தில் அந்த பகுதி வழியாக சிலர் சென்றுள்ளார். அவர்கள் புதருக்குள் மூதாட்டி கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

உடனே அவர்கள் மூதாட்டியை மீட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மேலும் இதுகுறித்து கண்ணநல்லூர் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் மூதாட்டியை பலாத்காரம் செய்த மர்ம நபரை தேடினர். அப்போது சம்பவ இடத்தில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் புதருக்குள் பதுங்கியிருந்த ஒருவரை போலீசார் பிடித்தனர்.

அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் மீயன்னூர் பகுதியை சேர்ந்த அனூஜ் (வயது 27) என்பதும், மூதாட்டியை பலாத்காரம் செய்தது இவர் தான் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அனூஜை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்