கணவன் தற்கொலை செய்த அதே கயிற்றில் தூக்கிட்டு மனைவியும் தற்கொலை - திருமணமான 2 மாதத்தில் விபரீத முடிவு
இருவரும் காதலித்து கடந்த 2 மாதங்களுக்குமுன் பதிவுத்திருமணம் செய்துகொண்டனர்.;
திருவனந்தபுரம்,
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் மணலோடி பகுதியை சேர்ந்த இளைஞர் ராஜேஷ் (வயது 23). அதேபோல், குரன்குளம் பகுதியை சேர்ந்த இளம்பெண் அம்ருதா (வயது 18) . இருவரும் காதலித்து கடந்த 2 மாதங்களுக்குமுன் பதிவுத்திருமணம் செய்துகொண்டனர்.
கணவன் - மனைவி இருவரும் மணலோடியில் உள்ள வீட்டில் வந்து வந்தனர். ராஜேசின் தாயாரும் அதே வீட்டில் வசித்து வந்தார். ராஜேசின் தாயார் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் ஆவார்.
இதனிடையே, கடந்த 3 நாட்களுக்குமுன் அம்ருதா உடல்நலம் பாதிக்கப்பட்ட தனது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார்.
இந்நிலையில், தாயாருடன் இருந்த ராஜேஷ் இன்று திடீரென வீட்டில் உள்ள அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். மகன் தற்கொலை செய்துகொண்டதை அறியாத அவரது தாயார் ராஜேசின் உடலை வீட்டில் உள்ள சோபாவில் வைத்துள்ளார்.
அப்போது, உறவினர் வீட்டிற்கு திரும்பி வந்த அம்ருதா தனது கணவர் ராஜேஷ் சோபாவில் சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து, வீட்டில் உள்ள அறைக்கு சென்ற அம்ருதா தனது கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட அதே கயிற்றில் தூக்கில் தொங்கி தானும் தற்கொலை செய்துகொண்டார்.
இந்த சம்பவம் குறித்து அறிந்த போலீசார், விரைந்து சென்று கணவன், மனைவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான 2 மாதத்தில் கணவன், மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.