துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிப்பு: பிரதமர் மோடிக்கு சிபி ராதாகிருஷ்ணன் நன்றி

எனது இறுதி மூச்சு உளவரை தேசத்துக்காக உழைப்பேன் என்று சிபி ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.;

Update:2025-08-17 21:39 IST

புதுடெல்லி,

தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் துணை ஜனாதிபதி வேட்பாளராக சி.பி. ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார். துணை ஜனாதிபதி வேட்பாளரை தேர்வு செய்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பாஜக ஆட்சி மன்ற குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.ஜார்க்கண்ட், தெலங்கானா மற்றும் புதுச்சேரி மாநில கவர்னராக இருந்த சி.பி. ராதாகிருஷ்ணன், தற்போது மகாராஷ்டிர கவர்னராக பதவி வகித்து வருகிறார்.

துணை ஜனாதிபதி வேட்பாளராக தன்னை அறிவித்ததற்கு பிரதமர் மோடி, ஜேபி நட்டா உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவிப்பதாக சிபி ராதாகிருஷ்ணன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் பதிவில், சிபி ராதாகிருஷ்ணன் கூறியிருப்பதாவது:- துணை ஜனாதிபதி வேட்பாளராக என்னை அறிவித்ததற்கு பிரதமர் மோடி, அமித்ஷா, ஜேபி நட்டா உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். என் மிதான நம்பிக்கைக்கும் தேசத்திற்கு சேவையாற்ற வாய்ப்பளித்ததற்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். எனது இறுதி மூச்சு உளவரை தேசத்துக்காக உழைப்பேன் என உறுதி அளிக்கிறேன்”என்று கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்