சத்தீஸ்காரில் கைதாகி ஜாமீனில் வந்த கேரள கன்னியாஸ்திரிகள் மாநில பாஜக தலைவருடன் சந்திப்பு

சந்திரசேகரின் வீட்டில் இந்த சந்திப்பு நடைபெற்றது.;

Update:2025-08-17 21:19 IST

திருவனந்தபுரம்,

கேரளாவை சேர்ந்த கிறிஸ்தவ மத கன்னியாஸ்திரிகள் பிரீதி மேரி, வந்தனா பிரான்சிஸ் கடந்த மாதம் 25ம் தேதி சத்தீஷ்காரில் கைது செய்யப்பட்டனர். மதமாற்றம், ஆள்கடத்தல் உள்ளிட்ட பிரிவுகளில் கேரள கன்னியாஸ்திகளை சத்தீஷ்கார் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த சம்பவத்திற்கு கேரளாவில் அரசியல் கட்சிகள், கிறிஸ்தவ அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன. மேலும், கன்னியாஸ்திரிகளின் விடுதலைக்கு முயற்சிகள் மேற்கொண்டன. இதையடுத்து, 9 நாட்களுக்குப்பின் கடந்த 3ம் தேதி கன்னியாஸ்திரிகள் இருவரும் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர். இதனை தொடர்ந்து கன்னியாஸ்திரிகள் 2 பேரும் சத்தீஷ்காரில் இருந்து கேரளா திரும்பினர்.

இந்நிலையில், விடுதலையான கன்னியாஸ்திரிகள் பிரீதி மேரி, வந்தனா பிரான்சிஸ் இருவரும் நேற்று கேரள மாநில பாஜக தலைவர் ராஜீவ் சந்திரசேகரை நேரில் சந்தித்தனர். சந்திரசேகரின் வீட்டில் இந்த சந்திப்பு நடைபெற்றது.

முன்னதாக ஜாமீனில் விடுதலையான கன்னியாஸ்திரிகள் இருவரையும் கேரள பாஜக மாநில தலைவர் ராஜீவ் சந்திரசேகர் சத்தீஷ்கார் சிறைக்கு நேரில் சென்று வரவேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்