சூரியன்-பூமி இடையிலான தூரம் அதிகரிப்பு; வானிலையில் ஏற்படப் போகும் திடீர் மாற்றம்

இந்த காலகட்டத்தில் கடந்த ஆண்டை விட வானிலை குளிராக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.;

Update:2025-08-18 06:58 IST

புதுடெல்லி,

நமது சூரியக் குடும்பத்தில் உள்ள அனைத்து கிரகங்களும், தனித்தனி சுற்றுவட்டப் பாதைகளில் சூரியனை சுற்றி வருகின்றன. இதில் நமது பூமி நீள்வட்டப் பாதையில் சூரியனை சுற்றுகிறது. இந்த சுழற்சியின்போது சூரியனுக்கும், பூமிக்கும் இடையிலான தூரத்தில் ஏற்படும் மாற்றம் பூமியின் வானிலையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

சூரியனுக்கும், பூமிக்கும் இடையிலான தூரம் குறைவாக இருப்பது பெரிலியன் நிகழ்வு(Perihelion Phenomenon) என்றும், தூரம் அதிகரிப்பது அபெலியன் நிகழ்வு(Aphelion Phenomenon) என்றும் அழைக்கப்படுகிறது. சூரியனுக்கும் பூமிக்கும் இடையிலான சராசரி தூரம் 90,000,000 கி.மீ. ஆகும். ஆனால் இந்த அபெலியன் நிகழ்வின்போது, இரண்டிற்கும் இடையிலான தூரம் 15,20,00,000 கி.மீ. ஆக அதிகரிக்கும். அதாவது, 66% அதிகரிப்பு ஆகும்.

இதன்படி இன்று காலை 5.27 மணிக்கு தொடங்கும் அபெலியன் நிகழ்வின் விளைவுகளை நாம் காண்பது மட்டுமல்லாமல், அதை உணரவும் முடியும். இந்த நிகழ்வு ஆகஸ்ட் 22-ந்தேதி முடிவடையும். இந்த காலகட்டத்தில் கடந்த ஆண்டை விட வானிலை குளிராக இருக்கும்.

இதனால் இந்த காலகட்டத்தில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு சளியை அனுபவிக்கலாம் என கூறப்படுகிறது. இது நம் உடலில் வலி மற்றும் தொண்டை வலி, காய்ச்சல், இருமல் மற்றும் சுவாசிப்பதில் சிரமத்தை ஏற்படுத்துகிறது. எனவே, வைட்டமின்கள் மற்றும் பிற ஆரோக்கியமான உணவுப் பொருட்களால் நமது நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவது நல்லது. 

Tags:    

மேலும் செய்திகள்