பஞ்சமி வழிபாடு: சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த வாராகி அம்மன்

சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த வாராகி அம்மனை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.;

Update:2025-08-14 12:39 IST

சப்த கன்னியர்களில் முக்கியமான தேவியான வாராகியை, பஞ்சமி திதியில் வழிபாடு செய்வது, சிறப்பான பலன்களைப் பெற்றுத் தரும். அன்றைய தினம் கோவில்களில் வாராகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் மற்றும் சிறப்பு தீபாராதனை நடைபெறும். அவ்வகையில் பஞ்சமி திதியை முன்னிட்டு நேற்று (13.8.2025) வாராகி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

சங்கரன்கோவில் தாலுகா களப்பாகுளத்தில் இருந்து உடப்பன்குளம் செல்லும் இணைப்பு சாலையில் ஸ்ரீமகாசக்தி வாராகி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் பஞ்சமி திதியை முன்னிட்டு நேற்று (13.8.2025) வாராகி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அபிஷேகங்களும், தீபாராதனைகளும் நடைபெற்றன. தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த வாராகி அம்மனை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

சிறப்பு பூஜையில் வாராகி அம்மன் கோவில் தலைமை பூசாரி சக்திவேல், பரமகணேசன், முருகன், கணேசன் மற்றும் செந்தில் ஆண்டவர் பாதயாத்திரை குழுவினர் உள்ளிட்ட திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

வீட்டில் வாராகி யந்திரம் வைத்திருப்பவர்கள், விக்கிரகம் வைத்திருப்பவர்கள், தேவிக்கு அபிஷேகம் செய்து, அர்ச்சித்து வழிபட்டனர். வாராகியை வழிபடுபவர்களுக்கு, மந்திர சித்தி, வாக்கு சித்தி கிடைக்கும். இந்த தேவியை பூஜிப்பவர்களுக்கு, செய்வினை அண்டாது என்பது நம்பிக்கை. 

Tags:    

மேலும் செய்திகள்