முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு

வேலாயுதம்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.;

Update:2025-07-23 15:25 IST

சிறப்பு அலங்காரத்தில் புகழிமலை பாலசுப்பிரமணிய சுவாமி

ஆடி மாதம் தொடங்கி உள்ள நிலையில், கோவில்களில் தினமும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. அவ்வகையில் ஆடி முதல் செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு முருகன் கோவில்களில் நேற்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் புகழிமலை பாலசுப்பிரமணியசுவாமி கோவிலில் நேற்று ஆடி மாத முதல் செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு பாலசுப்பிரமணிய சுவாமிக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த பாலசுப்பிரமணிய சுவாமியை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

அதேபோல் புன்னம் சத்திரம் அருகே பாலமலையில் உள்ள பாலசுப்பிரமணிய சுவாமி கோவில், நன்செய் புகளூர் அக்ரஹாரத்தில் உள்ள சுப்பிரமணியர் கோவில் மற்றும் நொய்யல் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களில் முருகப்பெருமானுக்கு ஆடி மாத முதல் செவ்வாய்க்கிழமை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் கலந்துகொண்டு முருகப் பெருமானை தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்