குரங்கணி முத்துமாலை அம்மன் கோவிலில் 1008 விளக்கு பூஜை

விளக்கு பூஜையில் கலந்து கொண்ட அனைவருக்கும் பூஜை பொருட்கள் அடங்கிய பை வழங்கப்பட்டது.;

Update:2025-07-23 11:25 IST

குரங்கணி முத்துமாலை அம்மன் கோவிலில் கடந்த 15ம் தேதி செவ்வாய் கிழமை ஆனி பெருந்திருவிழா (கொடைவிழா) நடைபெற்றது. நேற்று 8ம் நாள் கொடை விழா நடைபெற்றது. இதையொட்டி நேற்று காலையில் கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து கிளாரினெட் இன்னிசையும், நாதஸ்வர இன்னிசை, பக்தி பாடல் நிகழ்ச்சியும் நண்பகல் 12 மணிக்கு சிறப்பு சொற்பொழிவும் நடைபெற்றது.

மதியம் 1 மணியளவில் நாராயண சுவாமி தாமிரபரணி ஆற்றில் தீர்த்தவாரி (திருமஞ்சனம்) முடித்து சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து கோவிலின் மண்டபத்தை சுற்றி வந்து கோவிலை வந்தடைந்தார். இரவு 8 மணிக்கு திரைப்பட மெல்லிசை நிகழ்ச்சியும் நடைபெற்றது.

விழாவில் அறங்காவலர்கள் குழு தலைவர் ஜெயராஜ், அறங்காவலர்கள் சங்கர், ஜெகன்நாத், பெரியதுரை, சாரதா, கோவில் நிர்வாக அதிகாரி கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் அறங்காவலர்கள் குழு தலைவர் செல்வராஜ், குணசேகரன், ஜெகதீசன், முத்துமாலை, கல்யாணசுந்தரம், ராஜேந்திரன், தங்கராஜ், சரவணன், சிவசுப்பிரமணியன், ஜெகநாதன், ஜெயமுருகன், முருகன், முத்து கிருஷ்ணன், ஈஸ்வரன், ரவி, ஆதிநாராயணன், ராமஜெயம், 60 பங்கு நாடார்கள், சென்னை வாழ் குரங்கணி நாடார் சங்கத்தினர், கோவை வாழ் குரங்கணி நாடார் சங்கத்தினர், குரங்கணி ஊர் பொதுமக்கள் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு ஊர்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் விழாவில் கலந்து கொண்டனர்.

இரவில் 1008 குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது. பூஜையில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி அம்மனை வழிபட்டனர். குத்துவிளக்கு பூஜையில் கலந்து கொண்ட அனைவருக்கும் பூஜை பொருட்கள் அடங்கிய பை வழங்கப்பட்டது. குத்துவிளக்கு பூஜைக்கான ஏற்பாடுகளை சென்னை வாழ் குரங்கணி நாடார் சங்கம் செய்திருந்தது.

Tags:    

மேலும் செய்திகள்