ராதாபுரத்தில் ஆடு திருடிய வாலிபர் கைது
ராதாபுரம், துறை குடியிருப்பை சேர்ந்த ஒருவர் தனது ஆட்டை காணவில்லை என ராதாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.;
திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம், துறை குடியிருப்பை சேர்ந்த இசக்கிமுத்து (வயது 60) என்பவர் கடந்த 14ம்தேதி, ஆடு(1) காணவில்லை என ராதாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் சகாயராபின் ஷாலு வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார். அதில் தெற்கு வள்ளியூர், அழகப்பபுரம், தெற்கு தெருவை சேர்ந்த ஸ்ரீராம்(36) என்பவர் ஆட்டை திருடிச் சென்றது தெரியவந்தது. இதனையடுத்து ஸ்ரீராமை, சப்-இன்ஸ்பெக்டர் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுத்தார்.